அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் தனது உறவை மேம்படுத்த முற்பட்டுள்ளது.அவ்வகையில் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடியுள்ளார்.சீனாவுடனான ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது, முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை உந்துதல், வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் கட்சி ஒழுக்கத்தை பேணுதல் ஆகியவை குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் விரிவாக பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.எனினும் இந்தியா சீனாவுடனான நெருக்கத்தை காண்பிப்பதையடுத்து சீற்றமடைந்துள்ள நிலையில் ரில்வின் சில்வா டெல்லிபயணிக்கவுள்ளார்.எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இலங்கையின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுடனும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறவை பேணுகின்றமை குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வருட ஆரம்பத்தில் பீஜிங்கிற்கு பயணம் செய்தார். பிமல் ரத்நாயக்க ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் நல்லுறவு!
6
previous post