விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இன்று (26.10.2025) காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் காணப்படுகின்ற நிலைமையில் துயிலும் இல்லத்தில் ஒரு சிறிய பகுதியிலேயே குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையிலே குறித்த வளாகத்தின் முன் பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட வேளையில் குறித்த இடத்தில் இராணுவத்தினர் வருகைத்தந்து தமது முகாமுக்கு அருகில் உள்ள பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் என அறிவித்துள்ளனர்.
மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் தொடங்கியது
2
previous post