வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, மஹரகம, வட்டேகெதரவில் வைத்து, சி.ஐ.டி.யின் நிதிக் குற்றப் பிரிவினால், அரச புலனாய்வு சேவையின் (SIS) உதவியுடன் கைது செய்யப்பட்டார் .வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இன்று காலை கெகிராவ பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் இருவர் அடுத்தடுத்து காலியில் வைத்து வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர் காலி ஹியாரே பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் காலி மற்றும் மாத்தறை பகுதிகளுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சந்தேகநபருக்கு ரூ. 20,000 கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதாள உலக மோதல்கள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருள் வர்த்தக உலகின் பெரும் புள்ளி, கொலை, கொள்ளை மற்றும் கப்பம் பெறுதல் என்று பல்வேறு கடும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய தோழர் லசந்த விக்ரமசேகர என தெரியவிக்கப்பட்டுள்ளது
தெற்கில் தொடரும் கைதுகள்!
2
previous post