2
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர்.தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் போராடி வருகின்றனர். இவ்வாறான நிலையில் விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை தெரிவிக்கின்றனர். இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார். விவசாய நீர்ப்பாசன குளங்களை அழித்தும் பொய்களை கூறி வருவதுதானா இவர்களின் சிஷ்டம் சேன்ஜ் எனவும் தெரிவிக்கின்றனர்.