மினுவாங்கொடையில் 71 வயதுப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை! – Global Tamil News

by ilankai

மினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தில் 71 வயதுடைய  வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட இந்தப் பெண் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24.10.25) அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மிளகாய்த் தூள் முகத்தில் பூசப்பட்டு கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். மினுவாங்கொடை பதில் நீதவான் இந்திராணி ரத்நாயக்க சம்பவ இடத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்புமாறு காவற்துறைக்கு பணித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts