3
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கிழக்கு கன்னிவளவு பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.காங்கேசன்துறை கேமா அறக்கட்டளையின் அணுசரனையில் அறநெறி ஆசிரியை தங்கமணியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாலை கட்டுதல், கோலம் போடுதல் , தோரணம் கட்டல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பத்து மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.மாணவர்களுக்கான பரிசில்களை ஆலய பிரதம குருக்கள் பகீரதன் வழங்கி வைத்தார்.