கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு – சி. ஜெயசங்கர். – Global Tamil News

by ilankai

கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு …… கடலும் கரையும் அருகருகே – அவை இணையும் பரப்போ அழகிருப்பே இயல்பில் அவை ஒத்து இருப்பதில்லை – ஆனால் இணைவில் அழகிற்கு குறைவு இல்லை. கடலென்றும் ஓய்ந்தே இருந்ததில்லை தரையோ அசைந்து திரிந்ததில்லை பொங்கிப் பெருகிச் சிரித்து வரும் –  பெரும் கடலலை கரையில் தணிந்து கொள்ளும் – அவை தரைமடி  மீதில் அமைதி  கொள்ளும் – ஆயினும் கடலென்றும் ஓய்ததே இருந்ததில்லை தரையோ அசைந்து திரிந்ததில்லை –  அவை இயல்பில் ஒத்து இருப்பதில்லை –  ஆனால் இணைவில் அழகுகிற்கு குறைவு இல்லை. அலைகள் அணைந்து அமைதி கொள்ளும் அலைதொடு கரைதனின் மந்திரத்தில் – மனிதர் மனங்கள் ஆறி அமைதி கொள்ளும் கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு மனித மனங்களை ஆற்றும் குணமுமுண்டு. சி. ஜெயசங்கர்.

Related Posts