யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கோப்பாய்ச் சந்தியில் அமைந்துள்ள சமிக்கை விளக்குப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் ஏனைய வாகனங்களுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சமிக்ஞை விளக்கின் புறப்படுகை சமிக்ஞைக்காக எதிர் பகுதியில் காத்திருந்த ஐந்து வாகனங்களின் மீது குறித்த ஹயஸ் வாகனம் சமிக்ஞை இலக்கங்கள் முடிவடையும் வேளையில் வேகமாக கடந்து செல்ல முற்பட்ட போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பேருந்து , மோட்டார் சைக்கிள், கப் ரகவாகனம், ஹயஸ் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. இதனால் குறித்த இடத்தில் சற்று நேரம் பதட்டம் ஏற்பட்டது. இதன்போது அறுவர் காயமடைந்தனர். பலத்த காயங்களுக்குள்ளாகிய ஒருவர் உட்பட நால்வர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – Global Tamil News
3