வடக்கிற்கு முதலீட்டாளர்கள் அழைப்பு!

வடக்கிற்கு முதலீட்டாளர்கள் அழைப்பு!

by ilankai

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதலீட்டாளர் மாநாடு தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. அதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எதிர்வரும் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், தொழில்துறை அமைச்சகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் மாநாட்டை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு வடக்கு மாகாணம் 4 சதவீதமே பங்களிப்புச் செய்கின்றது. அதனை ஆகக் குறைந்தது 10 சதவீதமாகவேனும் உயர்த்தவேண்டும். அதற்கு முதலீட்டாளர் மாநாடுகளும் அதன் ஊடாக எமது மாகாணத்தை நோக்கி முதலீட்டாளர்களும் வரவேண்டும். முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றபோது;, மக்களும் முதலீடுகளை எதிர்க்காமல் அந்த முதலீடுகள் ஊடாக எமக்குத் தேவையானவற்றை பேரம்பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டும், என ஆளுநர் தெரிவித்துள்ளார்.  

Related Posts