இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கர்னூலில் இன்று ( 24) அதிகாலை இருசக்கர வாகனம் மீது மோதிய பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலா் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு நேற்று நள்ளிரவு 40 பயணிகளுடன் புறப்பட்ட படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து இன்று அதிகாலை எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் கீழ்ப்பக்கம் இருசக்கர வாகனம் சிக்கிய நிலையில் பேருந்தின் முன்பக்கம் பற்றிய தீ ஏனைய பகுதிக்கும் பரவியுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகளில் சிலர் அவசர காலத்தில் உதவும் கதவை உடைத்து கொண்டு லேசான காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறினர். வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழப்பு – Global Tamil News
32