திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் கனமழையிலும் இன்று (24) 38ஆவது நாளாக தொடர் உணவுத் தவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம், சூரியமின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதனை மீள பெற்றுத்தரக்கோரி உணவுத் தவிப்புப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.மழை காலங்களில் நனைந்து போராடுவதை நடப்பு கால அரசாங்கம் இரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன? இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமில்லை. அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். எமது கஷ்டத்தை உணருங்கள் ஜனாதிபதி கூறுகிறார். ஓடும் தொடருந்தில் அதே நிலையில் கைக்குழந்தையுடன் பெற்றோர்கள் வறுமையில் வாடுகின்றனர். அரசியலுக்காக அல்ல விவசாய பட்டியலை உரிய திணைக்களத்தில் பெற்று தீர்வினை பெற்றுத்தருவீர்கள் என காத்திருக்கிறோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலையில் 38வது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்!
2
previous post