யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திர சாரதி மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சாரதி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் மதுசன் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இடைமறித்துள்ளனர்..அதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி உழவு இயந்திரத்தில் தொடர்ந்து பயணித்த வேளை பொலிஸாரினால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த சாரதியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொடிகாமத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்
3
previous post