உள்நாடு-ஹரிணி : நம்பிக்கையில்லை-சாணக்கியன்!

by ilankai

இன அழிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும். சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை அதனால் நாடு பிளவுபடும் எனத்தெரிவித்துள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய.அனுர அரசின் ஒரு வருடம் கடந்துவிட்டது. இப்போது, ஒரு வருடம் கடந்த நிலையில்,; அரசு உள்நாட்டு முறைமையைக் கொண்டு செல்ல விரும்புகிறது. சர்வதேச தலையீடுகளுக்கு அனுமதியில்லை என்கிறீர்கள். ஏனெனில் அது சமூகங்களைப் பிளக்கும் என்றும் நாட்டில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்களேயென தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நம்பும், நம்பிக்கையுடன் ஈடுபடும் ஒரு செயல்முறை இருக்க வேண்டும். அரசு குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்டு சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்வார்கள் என நாங்கள் நம்பியிருந்தோமெனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.எனினும், நாங்கள் உங்கள் உள்நாட்டு முறைமையை நிராகரிக்கிறோம், மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் சர்வதேச விசாரணையையே கோருகிறோம், ஏனெனில் இலங்கையின் அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை. இது போர் முடிந்த 16 ஆண்டுகளாக எங்களின் நிலைப்பாடாகவே உள்ளது.இலங்கை இழப்பீடு அலுவலகத்தில் நியமிக்கப்படவிருக்கும் இரண்டு உறுப்பினர்களும் இராணுவ பின்னணியுடையவர்கள்.அதனால் பாதிக்கப்பட்ட எமது மக்களை கடுமையாக எதிர்க்கிறார்கள எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Related Posts