இலங்கை பெண் உத்தரபிரதேசத்தில் சடலமாக மீட்பு! – Global Tamil News

இலங்கை பெண் உத்தரபிரதேசத்தில் சடலமாக மீட்பு! – Global Tamil News

by ilankai

உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக  நேற்று புதன்கிழமை (22.10.25) அதிகாரிகள்  தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின் மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, பெண்ணின் உடலைக் கண்டனர். இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்தனர், அவர் சம்பவம் குறித்து காவற்துறையினருக்குத் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், காவற்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று  உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

Related Posts