இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.  காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு நேற்றைய தினம் திடீரென 3 – 4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் வெளிவந்துள்ளது பின்னர் வலந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts