யாழில். வாயினால் , மின்வயரை பிளக்கில் செருக முற்பட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு வாயினால் , மின்வயரை பிளக்கில் செருக முற்பட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு பிறப்பில் இருந்தே கைகள் மற்றும் கால்கள் செயற்படாத விசேட தேவைக்குரிய நபர் ஆவார். இவர் நேற்றைய தினம் புதன்கிழமை மின் இணைப்பு தேவைக்காக வயரை வாயில் வைத்தவாறு பிளக்கினுள் செருக முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழில். குடல் இறக்கத்தால் 13 நாள் குழந்தை உயிரிழப்பு! பிறந்தது 13 நாட்களேயான குழந்தை, குடல் இறக்கத்தால் உயிரிழந்துள்ளது. அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 09ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்துள்ளார். அந்நிலையில் குழந்தைக்கு சுகவீனம் காரணமாக தாயும் சேயும் அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். வைத்தியசாலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு குடல் இறக்கம் ஏற்பட்டமையாலையே இறப்பு சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில். வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு! ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டதால் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியவர் , கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் , திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நிமோனியாவினால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தில் 3 உயிரிழப்புகள்! – Global Tamil News
4