3
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமிருந்தும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதேவேளை வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞனின் தந்தை யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.