வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அனுர அரசின் பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர், கடந்த ஆண்டில் வடக்கில் மொத்தம் 672 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார். நிலங்களில் 86 ஏக்கர் தனியார் நிலங்களும், 586 ஏக்கர் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் அடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 34 ஏக்கர் அரசாங்க நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.எனினும் இவ்வாண்டில் சொல்லிக்கொள்ளத்தக்கதாக எந்தவொரு நிலவிடுவிப்பும் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.புலிகள் மீளெழுந்துவிடுவார்கள் என்ற இனவாத பிரச்சாரங்களின் மத்தியில் அரசு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க பின்னடித்துவருகின்றது. இதனிடையே வவுனியா இராணுவ விமான நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் விடுக்கப்படுமெனவும் அமைச்சர் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
700 ஏக்கர்:கடந்த ஆண்டு விடுவித்ததாம்!
4
previous post