யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில்

by ilankai

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஐஸ் மற்றும் சிறிய ரக கத்தியுடன் யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபர் யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் எனவும் , குறித்த இளைஞன் தன்னை கைதில் இருந்து விடுவிக்க சுமார் 20 இலட்ச ரூபாய் வரையில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனை விசாரணைகளின் பின்னர் , யாழ் . நீதவான் நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தி , இளைஞனிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் காவலில் இளைஞனை தடுத்து வைக்க மன்றில் அனுமதி கோரினர். அதன் பிரகாரம் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்துள்ளது 

Related Posts