போதைக்கு இராணுவமே காரணமாம்?

by ilankai

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் இலங்கை காவல்துறையால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரது மகன் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டிருந்தார்.எனினும் கைதிலிருந்து தப்பிக்க இலங்கை காவல்துறைக்கு சுமார் 20 இலட்சம் வரை லஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.எனினும் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னணி தலைமை பதில் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.இந்நிலையில் வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது.யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது. அவர்கள் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் அது சாத்தியமானது.அந்த காலப்பகுதியில் வடக்கில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இருந்தமையினால் அங்கு போதை அச்சுறுத்தல் குறைந்த அளவிலேயே இருந்தது.எவ்வாறாயினும், போர் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியுள்ளது.இராணுவத்தினரே நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளின் புரட்சியை தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் காவல்நிலையங்கள் ஏற்க மறுகின்றன. எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்த தேடிப்பார்க்க வேண்டுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Related Posts