செவ்வந்திக்கு படகு சேவை – அந்தோணிப்பிள்ளை ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு! – Global Tamil News

by ilankai

திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது.

Related Posts