4
ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட் நகரில் நடக்கவிருந்த ட்ரம்ப், புதின் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விதித்த நிபந்தனையை ரஷ்யா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள ரகசிய குறிப்பு ஒன்றில், டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் உரிமை ரஷ்யாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டால் தான் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. அதை ஏற்க அமெரிக்காவும் உக்ரைனும் மறுப்பதும் டிரம்ப், புதின் சந்திப்பு ரத்தானதற்கு காரணமாக கூறப்படுகிறது.