கொழும்பு-மன்னார் சொகுசு பேருந்து விபத்தில்  இளைஞன் பலி. – Global Tamil News

by ilankai

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை  அதிகாலை  விபத்திற்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரைய நாளன் குளம்  காவல்துறைப் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ள தோடு, சாரதியின் நித்திரை கலக்கத்தில் குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை  காவல்துறையினர்   முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts