5
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 20 வயதுடைய போதை மாத்திரை வியாபாரியை கைது செய்ததுடன் , வியாபாரியிடம் மாத்திரைகளை வாங்க வந்த 22 வயதுடைய நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 110 போதை மாத்திரைகளை காவல்துறையினா் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்