கிருமித்தொற்று காரணமாக குழந்தை  உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிறந்த குழந்தை ஒன்று 22 நாட்களின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்னர் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.  குழந்தை பிறந்த நாள் முதல் குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டமையால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக , யாழ் .  போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. குழந்தையின் மூளையில் கிருமி தொற்று ஏற்பட்டமையாலையே குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது

Related Posts