வலிகாமம் வடக்கு வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர், எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தனர்.படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று, வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அங்கு கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டடத்தின் நிர்மாண பணிகளை நிறுத்துமாறு கூறி வலி.வடக்கு பிரதேச சபையினால் அறிவுறுத்தல் கடிதம் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதில் கடிதமும் சபைக்கு இதுவரை கிடைக்கவில்லை. இன்னிலையில் 14 நாட்கள் கால அவகாசம் முடிந்த பின்னர் அக் கடிதம் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் அறிவித்துள்ளார்.வலி.வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஏற்கனவே ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணி தேடும் சுமந்திரன்!
0