வடகிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது உள்வீட்டு முரண்பாடுகள் உச்சமமடைந்துள்ளது.அவ்வகையில் வவுனியா மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம், உத்தியோகபூர்வமாகச் செயல்படுவதற்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்திருக்கிறது.வவுனியா மாநகர சபையின் பிரதி முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் வவுனியா மாநகர சபை எல்லைக்குள் இல்லாமல் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வசிப்பவர் எனத் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.வவுனியா மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர் மாநகர சபைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமை தவறென தெரிவித்து தேசிய மக்கள் கட்சியின் சார்பில் விஜயகுமார் என்பவரும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்ரமணியம் என்பவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.வழக்கை கடந்த நான்கு தவணைகள் விசாரித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கந்த் தடை உத்தரவை வழங்கி இருக்கின்றது.சிறீடெலோ கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த பரமேஸ்வரன் கார்த்தீபன் வெறும் 37 வாக்குகளை மட்டும் பெற்று பட்டியலில் தெரிவாகியிருந்தார்.எனினும் ஆட்சியமைக்க சிறீடெலோ கட்சியின் ஆதரவு தேவைப்பட்டிருந்த நிலையில் துணைதவிசாளர் ஆசனம் வழங்க பேரம்பேசப்பட்டு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கப்பட்டிருந்தமை குறிக்கப்பட்டிருந்தது.
உள்வீட்டு சண்டை : வவுனியா முடக்கம்!
0
previous post