2
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அம்பாளுக்கான இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் ஆலய தர்மகர்த்தாக்கள், அடியவர்கள் கலந்து இராஜ கோபுரத்திற்காக அடிக்கல்லினை நாட்டினர். ஆலயத்தில் பாலஸ்தானம் இடம்பெற்று, ஆலய புனரமைப்பு வேலைகள் துரித கெதியில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Spread the love அடிக்கல்அரசடி அம்மன்திருநெல்வேலிபுனரமைப்பு