இலங்கை அரசின் 34 நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பின! – Global Tamil News

by ilankai

இலங்கை அரசாங்கத்தின் கிளவுட் அமைப்பில் (State Cloud System) இருந்த சிக்கல் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. முடக்கப்பட்டிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம். அரச கிளவுட் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 34 அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Spread the love  இலங்கை அரசாங்கம்கிளவுட் அமைப்பு

Related Posts