3
வடமராட்சி பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமை கட்டமைப்பை பார்வையிட்ட யாழ் . மாநகர முதல்வர் யாழ்ப்பாணம் , வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா உள்ளிட்ட குழுவினருக்கு , திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் தொழிற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.