வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு சமர்ப்பிப்பு – Global Tamil...

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு சமர்ப்பிப்பு – Global Tamil News

by ilankai

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த முன்மொழிவு கையளிக்கப்பட்டதுடன், ஆசிரிய ஆளணிச் சீராக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளிடம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படாமை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது என்றும் ஆசிரிய சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Related Posts