யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையம் வெளிநோயாளர் கட்டிடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த மையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டிடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம், நோயாளிகளுக்கு ஏற்படும் நெரிசல்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் தேவையான சேவைகளை பெற முடிகின்றது.தினசரி 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இலகுவாகவும் முறையான முறையிலும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது.ஆகவே இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது.மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பதிவாகும் நோயாளி ஒருவருக்கு அனைத்துவிதமான பரிசோதனைகள் (Screening) மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் (Annual Screening) மூலம், சிக்கல்களின் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.கடந்த 15 வருடங்களாக, இச்சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (International Medical Health Organization – USA) தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது. இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும், நோயாளிகளுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளன என மேலும் தெரிவித்தார்.
யாழ் போதனாவில் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் விரிவாக்கம்
3
previous post