ஒரு வார கால பகுதியில் 29 பேர் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் , 90 லீட்டர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,காவல்துறையினரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

Related Posts