9
மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு.ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.