வழிபாட்டிற்கு சென்றவர் ஆலயத்தினுள் உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் – அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அராலி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் (வயது 81) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்ற நிலையில், ஆலய மண்டபத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Spread the love  அராலிஅராலி வீரபத்திரர் கோவில்ஆலயத்தினுள் உயிரிழப்புவழிபாடு

Related Posts