சாவகச்சேரியில் போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

by ilankai

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை , போதை மாத்திரைகளை வைத்திருந்தமை , மாவா பாக்கினை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  Related Posts யாழ்ப்பாணம் Post a Comment

Related Posts