3
சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான, சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ண் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்களும் பிரதேச மக்களும் கணடன போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்திருந்தனர்.கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கண்டனப் பேரணி நடைபெற்றால், அது விசாரணைக்கு இடையூறாக அமையும் என்றும், தேவையற்ற பிரச்சினைகள் எழும் எனவும் காரணம் கூறி, போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.