கம்பஹா பபாவின்  தகவல்களின்படி 50 தோட்டாக்கள் மீட்பு – Global Tamil News

by ilankai

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான ‘கம்பஹா பபா’ எனும் சந்தேக நபா் வழங்கிய  தகவல்களின்படி, T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வைத்து  விசாரிக்கப்படும் கம்பஹா பபா நேற்று (18) பேலியகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது  அவா் வழங்கிய  தகவல்களின்படி, கந்தானை – கெரவலப்பிட்டி அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வடிகால் கட்டமைப்பில் இருந்து சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தோட்டாக்கள் கெஹெல்பத்தர பத்மேவினால் தனக்கு வழங்கப்பட்டதாக  கம்பஹா பபா   விசாரணையில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த தோட்டாக்களை வெலிசறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts