அமைச்சரதும் ஆளுநரதும் தீபாவளி வாழ்த்துகள்! – Global Tamil News

by ilankai

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.தீபாவளியை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த வாழ்த்து செய்தியில், ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது. தீமையை வீழ்த்தி நன்மை வெற்றிபெறும் நினைவூட்டலாகவும், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும் சமூகத்தை உருவாக்கும் ஊக்கமாகவும் இந்தப் பண்டிகை விளங்குகிறது. நம் மனத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் இருளை – அறியாமை – பொறாமை – தீமை அகற்றி ஒளியை அறிவு – அன்பு – நம்பிக்கை – பரப்பும் திருநாளாகும். இந்த இனிய நாளில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும். வடக்கு மாகாண மக்களுக்கு நான் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாளின் ஒளி அனைவரின் இதயங்களிலும் நல்வாழ்வையும் செழிப்பையும் நிரப்பட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை தேசிய மக்கள் சக்தி அழிக்கும் என கடற்தொழில் அமைச்சர் இ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், ‘ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த அவதாரமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். ‘ அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். அதற்குரிய பணியை நாம் செய்து வருகின்றோம். எமது ஆட்சியில் அநீதிக்கு இடமில்லை. சமூகநீதி என்பதே முதன்மைக்கொள்கையாகும். எனவே, எமது ஆட்சியின் கீழ் நிச்சயம் இருள் நீங்கி, மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கும். தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அது உண்மைதான் கடந்தகாலங்களில் இந்நாட்டை ஆண்டவர்கள் தீமைகளையே பெரிதும் இழைத்துள்ளனர். இதன்காரணமாகவே மக்களின் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலர்ந்துள்ளது. இந்நன்னாள் நாட்டுமக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்த வேண்டும்.   அனைவர் வாழ்விலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும், வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts