யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர் – தீர்க்கப்பட்ட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு

by ilankai

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , நல்லூர் மந்திரிமனை, யாழ்ப்பாணம் நூதன சாலை, பருத்தித்துறை தெருமூடி மடம் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீடு என்பனவற்றை  பார்வையிடப்பட்டதோடு அவற்றின் அபிவிருத்திக்குச் சவாலாக உள்ள காணி உரிமம், கட்டுமானம் மற்றும் சட்டம் சார் விடயங்கள் தொடர்பிலும் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் குறித்த சவால்களை தீர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைச் சீரமைப்புத் தொடர்பாகவும் துறை சார்ந்தவர்களுடன் ஆலோசித்தார்.

Related Posts