பங்களாதேஷில்  ஜூலை சாசனத்திற்கு எதிராக  போராட்டம்! – Global Tamil News

by ilankai

பங்களாதேஷில்  ஜூலை சாசனத்திற்கு எதிராக  போராட்டம் இடம்பெற்றுள்ளது .  பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான  இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு காவற்துறை  வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, இந்த போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதை தொடர்ந்து, காவற்துறையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதிய சாசனம் தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை எனக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts