கிட்டு பூங்காவை மூடிவிட சதி!

by ilankai

இந்திய தூதரக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் முத்திரைச்சந்தியிலுள்ள கிட்டு பூங்காவை இழுத்து மூட பல தரப்புக்கள் சதிகளை பின்ன தொடங்கியுள்ளன.ஜங்கரநேசன் முதல் சீவீகே யென பலரும் அத்தகைய சதிகளை பின்ன தொடங்கியுள்ளனர்.தமிழின அரசாட்சியின் சின்னமாக விளங்கும் யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கு திடமான நிலையை ஏற்படுத்தி தருமாறு வடக்கு ஆளுநரிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயம் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு சீ.வீ.கே சிவஞானம் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ”நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் இந்த நிலம் மாநகர சபைக்கு உரித்தானது அல்ல என்ற தோரணையிலும் அது அரச காணி என்ற தோரணையிலும் இங்கு நல்லூர் பிரதேச செயலகம் அமைப்பதற்கு அனுமதி கோரி தங்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கையின் பேரில் தங்கள் தலைமையில் ஓர் அதிகாரிகள் கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்றதாக ஊடகச் செய்தி மூலம் அறிய வந்தது.இது மிகுந்த அதிர்ச்சியை தந்தது. இதற்கு மேலாக நல்லூர் பிரதேச செயலகத்திற்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினால் வழங்கப்பட்ட குத்தகை 25 அல்லது 30 வருடம் என்றும் ஏற்கனவே அதில் 15 அல்லது 20 வருடங்கள் சென்றுவிட்டதாகவும், நல்லூர் கோவில் நிர்வாகம் கால நீடிப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்தது. இவை முழுவதுமே உண்மைக்கு புறம்பானவை.நல்லூர் பிரதேச செயலகத்திற்கு அதன் கட்டடம் அமைந்துள்ள 10 பரப்பு காணியை மாநகர சயைின் குத்தகையில் இருந்து நீக்கி 01.05.2005 ஆம் திகதியில் இருந்து 50 வருடக் குத்தகையை நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததே நான்தான். அதில் சாட்சியாக நானே ஒப்பமிட்டிருப்பதையும் காணலாம்.குத்தகைக் காலம் இன்னும் 30 வருடங்கள் இருக்கையிலும், குத்தகை முடிவுக் காலத்தில் அதனை நீடிப்பதற்கான ஏற்பாடு உடன்படிக்கையிலேயே உள்ளடக்கப் பட்டு இருக்கையிலும், சங்கிலி மன்னனின் பெயரில் அமைந்த பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில் இந்தக் காணியை தமக்கு வழங்குமாறு கோரும் நோக்கம் புரிந்து கொள்ள முடியாதததும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.இதன் பின்னணியில் ஏதாவது மறைகரங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதே. இதில் எனக்கிருந்த மிகப் பெரிய ஆச்சரியம் மாநகர சபை நிர்வாகமும் தெளிவற்று குழம்பியிருந்தமையாகும்.தமிழின அரசாட்சியின் சின்னமாக “ நல்லூர் சங்கிலியன் பூங்கா” எனும் பெயரில் எம்மின வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டு தொடர்வதற்கான திடமான நிலையை ஏற்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts