வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்! – Global Tamil News

by ilankai

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டதுதேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால்  தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக சிவாஜிலிங்கம் உறுப்பினராக முடியவில்லை. இந்நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் ஊடாக அவரது வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினராக சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts