மனுஷ நாணயக்கார கைது – Global Tamil News

by ilankai

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.  வாக்குமூலம்  வழங்குவதற்காக அவா்  இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக அவா் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு    அழைக்கப்பட்டிருந்தார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts