பங்களாதேசில்ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 16போ் பலி – Global Tamil News

பங்களாதேசில்ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 16போ் பலி – Global Tamil News

by ilankai

பங்களாதேசின் தலைநகர் டாக்காவில்  ஆடைத் தொழிற்சாலை  மற்றும் ரசாயன கிடங்கில் இன்று செவ்வாய்க்கிழமை(15)  ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள ரசாயன கிடங்கில் கடுமையான து ஏற்பட்ட   ஆடைத் தொழிற்சாலைக்கும்  பரவியது.  தீயணைப்பு பணிகளின்போது தொழிற்சாலையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த அனைவரும் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தொழிற்சாலையில் இன்னும் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என தீயணைப்புப் படை அதிகாரிகள்அச்சம் தெரிவித்துள்ளனர். பங்களாதேசில் தொழிற்சாலை விபத்துகள் காரணமாக பேரழிவுகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. டாக்கா அருகே  ஆடை  தொழிற்சாலையில் 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts