இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது! – Global Tamil News

by ilankai

இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலோசனையில்,  இலங்கையில் பல புதிய எச்சரிக்கை குறிகாட்டிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற அபாயங்கள் காரணமாக தமது பயணிகளை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது. நாட்டில் ஏற்படக்கூடிய ஸ்திரமின்மை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இந்த ஆலோசனை குறிக்கிறது. Spread the love  அமெரிக்காஇலங்கைஇலங்கைக்கான பயண ஆலோசனை

Related Posts