வடமாகாண ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்தியாம்

by ilankai

அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களிள் மாற்றங்களைச் செய்யக்கூடும் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின் செயற்பாடுகள், பெறுபேறுகள், நடவடிக்கை முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மதிப்பீடுகளைத் தயாரித்து வருகின்றது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.அவற்றின் அடிப்படையில் ஜனாதிபதியின் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தமிழர்களின் ஈடுபாடுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதி செயலகம் ஓரளவு திருப்தி கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

Related Posts