மன்னார் தீவில் மக்கள் எதிர்ப்பினை தாண்டி காற்றாலை திட்டம் தொடர்கின்றது.இந்நிலையில் திட்டமிடப்பட்ட மற்றொரு வேலைத்திட்டமான கனரக கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் அருட்தந்தை சாந்தியாகு மார்கஸ் மற்றும் மூன்று பேர் இணைந்து மனுவை தாக்கல் செய்துள்ளனர்.மன்னார் பகுதியில் சுரங்க நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் குறிப்பு விதிமுறைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது. இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுவை பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.2024 ஆம் ஆண்டில், கனரக கனிம மணல் பிரித்தெடுப்பு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தயாரிப்பதற்காக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.மன்னார் தீவின் முக்கிய கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியதாக உப்புத்தரவை–பேசாலை முதல் தெற்கு தாழவுப்பாடு வரை மணல் அகழ்விற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காற்றாலை வீழ்ந்தது!:அடுத்து கனிய மணலா?
18
previous post