சட்ட விரோத மணலுடன் கன்ரை கைப்பற்றிய காவல்துறையினா் – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்ட மணலுடன், இலக்க தகடற்ற கன்ரர் வாகனம் ஒன்றை யாழ்ப்பாண காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர். அரியாலை பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாணகாவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு  காவல்துறையினா் விரைந்த போது, காவல்துறையினரை கண்டதும் மணல் ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் வாகனத்தை அவ்விடத்தில் கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை அடுத்து வாகனத்தை கைப்பற்றிய காவல்துறையினா்  வாகனத்தின் இலக்க தகடு அற்ற நிலையில், வாகனத்தின் இயந்திர இலக்கம் மற்றும் வாகன அடிச்சட்ட இலக்கத்தின் அடிப்படையில் வாகன உரிமையாளரை கைது செய்வதற்காக  காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts