அடுத்து யார் உள்ளே?

by ilankai

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெற்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.கைது வரும் நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும்  கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்பது அறியப்படுகிறது.இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்வதாக  நீதி, அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார, தெரிவித்துள்ளார்.குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.முன்னதாக கைதாகியுள்ள முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விசாரணைகளில் பின்னணியிலிருந்தவர்களை காட்டிக்கெர்டுத்துள்ளதாக தெரியவருகின்றது.தற்போது பிள்ளையானின் தகவல்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களை இயக்கிய அரசியல்வாதியாகியோர் கைதாகலாமென நம்பப்படுகின்றது.

Related Posts